இயேசுவே இயேசுவே 
நீயே சொந்தம் நீயே சொந்தம்
நீயே தஞ்சம் நீயே தஞ்சம்
நீயே செல்வம் நீயே செல்வம்
என் வாழ்வின் மையம் 

[Instrumental]

நீதானே இறைவா நிலையான சொந்தம்
உனையன்றி உலகில் எனக்கேது பந்தம்
நீதானே இறைவா நிலையான சொந்தம்
உனையன்றி உலகில் எனக்கேது பந்தம்
உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம்
உனை என்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம் 
உனை என்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம்
நீயே சொந்தம் நீயே பந்தம்
நீயே செல்வம் வாழ்வின் மையம்
நீயே சொந்தம் நீயே பந்தம்
நீயே செல்வம் வாழ்வின் மையம் 

[Instrumental]

கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே
உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே 
கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே
உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே 
கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே
கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே 
வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே 
வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே 
நீயே சொந்தம் நீயே பந்தம்
நீயே செல்வம் வாழ்வின் மையம்
நீதானே இறைவா நிலையான சொந்தம்
உனையன்றி உலகில் எனக்கேது பந்தம்

[Instrumental]

நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ
இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன
நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ
இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன
நானெங்கு போவது உனைப் பிரிந்து
நானெங்கு போவது உனைப் பிரிந்து
வாழ்வு எல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து
வாழ்வு எல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து
நீயே சொந்தம் நீயே பந்தம்
நீயே செல்வம் வாழ்வின் மையம்
நீதானே இறைவா நிலையான சொந்தம்
உனையன்றி உலகில் எனக்கேது பந்தம்
உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம்
உனை என்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம்
உனை என்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம்
நீயே சொந்தம் நீயே பந்தம்
நீயே செல்வம் வாழ்வின் மையம்
நீயே சொந்தம் நீயே பந்தம்
நீயே செல்வம் வாழ்வின் மையம்
நீயே சொந்தம் நீயே பந்தம்
நீயே செல்வம் வாழ்வின் மையம்