மன்னிப்பாயா மன்னிப்பாயா,
மன்னவனே என்னை மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா,
மன்னவனே என்னை மன்னிப்பாயா
[Instrumental]
பாதை தவறி நான் அலைந்தேன்,
பாவக்குழியில் நான் விழுந்தேன்,
தாங்கிய கரங்களை உதறிவிட்டேன்,
உன் ஏங்கிய இதயத்தை நொறுக்கிவிட்டேன்
மன்னிப்பாயா மன்னிப்பாயா,
மன்னவனே என்னை மன்னிப்பாயா
[Instrumental]
மாய உலகத்தில் எனை இழந்தேன்,
மங்காத ஒளி உம்மை மறந்திருந்தேன்,
மாபரன் குருதியைச் சிதறவிட்டேன்
மனிதனின் குணத்தைக் குறைத்துவிட்டேன்
மன்னிப்பாயா மன்னிப்பாயா,
மன்னவனே என்னை மன்னிப்பாயா
[Instrumental]
மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன்
என் மகனே எப்போதும் மன்னிக்கின்றேன்
மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன்
என் மகளே எப்போதும் மன்னிக்கின்றேன்
[Instrumental]
முள்முடி வேதனை உனக்காக
மும்முறை விழுந்ததும் உனக்காக
ஆணிககொண்ட காயங்கள் உனக்காக
என் ஆவியும் உயிரும் உனக்காக
மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன்
என் மகனே எப்போதும் மன்னிக்கின்றேன்
[Instrumental]
சிலுவைப் பாடுகள் உனக்காக
சிந்திய திரு இரத்தம் உனக்காக
கல்வாரி பலியும் உனக்காக
காலமெல்லாம் நான் உனக்காக
மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன்
என் மகனே எப்போதும் மன்னிக்கின்றேன்
மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன்
என் மகளே எப்போதும் மன்னிக்கின்றேன்
[Instrumental]