என்னை சுமப்பதனால் இறைவா

[Instrumental]

என்னை சுமப்பதனால் இறைவா
உந்தன் சிறகுகள் உடைவதில்லை
என்னை நேசிப்பதால் இறைவா
உந்தன் அன்பு குறைவதில்லை
இயேசுவே என் சொந்தமே
இயேசுவே என் பந்தமே
என்னாலும் என்னைக்காக்கும்
என் தெய்வமே

என்னை சுமப்பதனால் இறைவா
உந்தன் சிறகுகள் உடைவதில்லை
என்னை நேசிப்பதால் இறைவா
உந்தன் அன்பு குறைவதில்லை

[Instrumental]

அன்பு ஒன்றால் உலகை ஆள
உண்மை வழியைக் காட்டினாய்
பகைமை நீக்கி பாசம் ஓங்க
நேசதீபம் ஏற்றினாய்
உன் சிறகின் நிழலில் பயணம் தொடர்வேன்
பாதுகாப்பாய் இறைவா என்னை
பாதுகாப்பாய் இறைவா

என்னை சுமப்பதனால் இறைவா
உந்தன் சிறகுகள் உடைவதில்லை

[Instrumental]

 நீதி வழியில் நிறைவினைக் காண
நீயும் உலகில் தோன்றினாய்
சேயை நேசிக்கும் தாயைப் போல
தயவாய் என்னைக் காக்கின்றாய்
உன் அமைதியின் வழியில் அனைத்துமாய் ஆனேன்
ஆண்டு நடத்தும் இறைவா என்னை
ஆண்டு நடத்தும் இறைவா

என்னை சுமப்பதனால் இறைவா
உந்தன் சிறகுகள் உடைவதில்லை
என்னை நேசிப்பதால் இறைவா
உந்தன் அன்பு குறைவதில்லை
இயேசுவே என் சொந்தமே
இயேசுவே என் பந்தமே
என்னாலும் என்னைக்காக்கும்
என் தெய்வமே
என்னை சுமப்பதனால் இறைவா
உந்தன் சிறகுகள் உடைவதில்லை
என்னை நேசிப்பதால் இறைவா
உந்தன் அன்பு குறைவதில்லை

[Instrumental]