[Instrumental]
எனக்காகவோ எனக்காகவோ
கொல்கொதா மலைமீதில் எனக்காகவோ

கொலைமரம் மீதில் குருதியும் சிந்தி
என் சாபம் போக்க ஜீவனை ஈந்தீர்
இவ்வன்பிற்காய் அர்ப்பணித்தேன்
இயேசுவே என்னையும் ஏற்றுக்கொள்ளும்

எனக்காகவோ எனக்காகவோ
கொல்கொதா மலைமீதில் எனக்காகவோ
[Instrumental]
மரணத்தின் அதிகாரியாம் சாத்தானை
உம் மரணத்தால் முற்றும் அழித்தீரே
மரணத்தின் அதிகாரியாம் சாத்தானை
உம் மரணத்தால் முற்றும் அழித்தீரே

அடிமையை விடுவிக்கவே
சிலுவையில் தொங்கினீரே
ஏழை அடிமையை விடுவிக்கவே
சிலுவையில் தொங்கினீரே

கொலைமரம் மீதில் குருதியும் சிந்தி
என் சாபம் போக்க ஜீவனை ஈந்தீர்
இவ்வன்பிற்காய் அர்ப்பணித்தேன்
இயேசுவே என்னையும் ஏற்றுக்கொள்ளும்

எனக்காகவோ எனக்காகவோ
கொல்கொதா மலைமீதில் எனக்காகவோ

[Instrumental]
அடிக்கிறவனுக்கு முதுகையும்
உமிழ்நீருக்கு உம் முகத்தையும்
அடிக்கிறவனுக்கு முதுகையும்
உமிழ்நீருக்கு உம் முகத்தையும்

முகமதை பிரகாசிக்க
மறைக்காமல் ஒப்புவித்தீர்
என் முகமதை பிரகாசிக்க
மறைக்காமல் ஒப்புவித்தீர்

கொலைமரம் மீதில் குருதியும் சிந்தி
என் சாபம் போக்க ஜீவனை ஈந்தீர்
இவ்வன்பிற்காய் அர்ப்பணித்தேன்
இயேசுவே என்னையும் ஏற்றுக்கொள்ளும்

எனக்காகவோ எனக்காகவோ
கொல்கொதா மலைமீதில் எனக்காகவோ

[Instrumental]
வையப்படும்போது பதில் வையாமலே
பாடுறும்போது பயப்படுத்தாமலே
வையப்படும்போது பதில் வையாமலே
பாடுறும்போது பயப்படுத்தாமலே

சற்குணர் ஆக்கிடவே
தீர்ப்புக்காய் ஒப்புவித்தீர்
என்னை சற்குணர் ஆக்கிடவே
தீர்ப்புக்காய் ஒப்புவித்தீர்

கொலைமரம் மீதில் குருதியும் சிந்தி
என் சாபம் போக்க ஜீவனை ஈந்தீர்
இவ்வன்பிற்காய் அர்ப்பணித்தேன்
இயேசுவே என்னையும் ஏற்றுக்கொள்ளும்

எனக்காகவோ எனக்காகவோ
கொல்கொதா மலைமீதில் எனக்காகவோ

[Instrumental]
இருதிறத்தாரையும் ஒன்றாகிட
பகையென்னும் பிரிவினை அகற்றியே
இருதிறத்தாரையும் ஒன்றாகிட
பகையென்னும் பிரிவினை அகற்றியே

திருமுகம் கண்டிடவே
நடுசுவர் தகர்த்தீரன்றோ
உம் திருமுகம் கண்டிடவே
நடுசுவர் தகர்த்தீரன்றோ

கொலைமரம் மீதில் குருதியும் சிந்தி
என் சாபம் போக்க ஜீவனை ஈந்தீர்
இவ்வன்பிற்காய் அர்ப்பணித்தேன்
இயேசுவே என்னையும் ஏற்றுக்கொள்ளும்

எனக்காகவோ எனக்காகவோ
கொல்கொதா மலைமீதில் எனக்காகவோ
[Instrumental]
புதிதும் ஜீவனான மார்க்கம் வழியே
கறைதிரை இல்லாமல் வாழ்ந்திடவே
புதிதும் ஜீவனான மார்க்கம் வழியே
கறைதிரை இல்லாமல் வாழ்ந்திடவே

தேகமாம் திரையதனை
கிழித்தீரே விண்ணில் சேர்க்க

உம் தேகமாம் திரையதனை
கிழித்தீரே விண்ணில் சேர்க்க

கொலைமரம் மீதில் குருதியும் சிந்தி
என் சாபம் போக்க ஜீவனை ஈந்தீர்
இவ்வன்பிற்காய் அர்ப்பணித்தேன்
இயேசுவே என்னையும் ஏற்றுக்கொள்ளும்

எனக்காகவோ எனக்காகவோ
கொல்கொதா மலைமீதில் எனக்காகவோ