[Instrumental]
அப்பா உங்க மடியில நான்
தல சாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புல தான்
உயிர் வாழனும்
அப்பா உங்க மடியில நான்
தல சாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புல தான்
உயிர் வாழனும்
என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா
என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா
அப்பா உங்க மடியில நான்
தல சாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புல தான்
உயிர் வாழனும்
[Instrumental]
என் உசுருக்குள்ள கலந்து நீங்க
உயிர் வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ
என் உசுருக்குள்ள கலந்து நீங்க
உயிர் வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்துவந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ
என் கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ
அப்பா உங்க மடியில நான்
தல சாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புல தான்
உயிர் வாழனும்
[Instrumental]
உங்க உள்ளங்கையில் என்ன வரஞ்சி
பாத்து கிட்டது ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணி அடிக்க
பொறுத்து கிட்டதும் ஏனோ
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்து வந்ததும் ஏனோ
என் வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்து வந்ததும் ஏனோ
அப்பா உங்க மடியில நான்
தல சாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புல தான்
உயிர் வாழனும்
[Instrumental]
பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்ம நேசிக்க இந்த பாவிக்கு தெரியல
பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்ம நேசிக்க இந்த பாவிக்கு தெரியல
உதிரம் சிந்தி உசுர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொறுங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு
நான் ஒடஞ்சி நொறுங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு
அப்பா உங்க மடியில நான்
தல சாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புல தான்
உயிர் வாழனும்
அப்பா உங்க மடியில நான்
தல சாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புல தான்
உயிர் வாழனும்
என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா
என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா
அப்பா உங்க மடியில நான்
தல சாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புல தான்
உயிர் வாழனும்